karam pidithu vazhi nadathum கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2
ஆமென் அல்லேலூயா
1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்
2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வை தொடருவார்
3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்