karthar nallavar rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து
Karthar Nallavar Rusitu
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2
1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2
அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2
2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2
அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
அவர் மகிமையில் தங்கிடுவாய் -2
3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2
அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -2