karththar enakkaaka yaavaiyum seyvaarae கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே
கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே
அற்புதமானவற்றை ஆச்சரியமாக செய்வார்
1. செய்வார் எல்லாம் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார்
எல்லாம் செய்வார் எனக்காய் செய்வார்
செய்யாமல் இருக்க மாட்டார்
முடிப்பார் எல்லாம் முடிப்பார்
நன்மையாய் முடித்திடுவார் — கர்த்தர்
2. கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
பெறுவேன் நன்மை பெறுவேன்
பெறாமல் இருக்கமாட்டேன்
எல்லாம் கூடும் அவரால் கூடும்
கூடாத தொன்றில்லையே
நன்மை பெறுவேன் நிச்சயம் பெறுவேன்
பெறாமல் இருக்க மாட்டேன் — கர்த்தர்
3. ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமே
எல்லாம் ஆகும் அவரால் ஆகும்
ஆகாத தொன்றில்லையே
கிடைக்கும் கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
கேட்டது கிடைத்திடுமே — கர்த்தர்