karththarukku anji nadappor கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்
கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்
மெய் பாக்கியம் பெற்றவனாவாய் (2)
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
உயர் எருசலேம் வாழ்வை காண்பாய் (2)
தங்கீடும் சந்தோஷம் பொங்கிடும் ஓங்கிடும்
என்றும் பரலோக இன்பமயம்
கர்த்தரின் கருணை பக்தரின் இல்லத்தில்
நிறைவாகவே நிரம்பி விடும்
1.உழைப்பின் ஊதியம் தழைத்தே வளரும்
என்றும் போதியதாய் இருக்கும் (2)
வீட்டில் உன் மனைவி நல்ல திராட்சை கோடி
மிக கனிகளை தந்திடுவாள் (2) … தங்கிடும் சந்தோஷம் … கர்த்தருக்கு
2. ஒலிவ கன்றுகள் போலவே பிள்ளைகள்
பந்தி சூழவே நிறைந்திருப்பார் (2)
பிள்ளைகைளின் பிள்ளைகளை கண்டு ஆனந்திப்பார்
மெய் பாக்கியம் தான் இவரே (2) … தங்கிடும் சந்தோஷம் … கர்த்தருக்கு