karththavey en pelaney கர்த்தாவே என் பெலனே
கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர் (2)
1.மரணத்தின் கட்டுகள் சூழ்ந்தபோதும்
துர்ச்சனப் பிரவாகம்புரண்டபோதும்
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
உருக்கமாய் வந்து உதவி செய்தார் (2)
2.தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர் (2)
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
புதிய கிருபையின் உறைவிடமே (2)
3.உம்மாலே ஓர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலை தாண்டுவேன் (2)
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
சதாகாலமும் ஜெயம் எடுப்பேன் (2)
4.இரட்சணிய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும்
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
அவரே எந்தன் கன்மலையாவார் – கர்த்தாவே
5.பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களைப் போலாக்கி
நீதியின் சால்வையை எனக்கு தந்து
உயர்ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார் (2)