kirubayae unnai innal கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே
பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த
சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன்
ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன்
ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே
என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்ணில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே