• waytochurch.com logo
Song # 25755

kirupai vaenndum naathaa கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய


கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய
கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில்
1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே
உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது — கிருபை
2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை
இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின — கிருபை
3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி
இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின — கிருபை
4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே
பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின — கிருபை
5. பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்
உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே — கிருபை
6. தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின
நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் — கிருபை
7. வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா
தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட — கிருபை
8. அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட
முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால் — கிருபை

kirupai vaenndum naathaa – yesuvae um thivviya
kirupai vaenndum naathaa – ivvaaraathanaiyil
1. um kirupai thaan vaenndum sorloka raajaavae
um kirupai yallaathu engalaal aakaathu — kirupai
2. aelu pisaasukal ottiyae mariyaalai
inpamaay naesiththu anpaal nirappina — kirupai
3. iruvaraam seesarin sanjalangal neekki
iruthayam kulirnthida inimaiyaay paesina — kirupai
4. paavaththai inimael seyyaathae entumae
paaviyaam sthirikku naesamaayk koorina — kirupai
5. penthae kosthae naalil anparaam seeshar mael
unthan varangalai maaripol polinthae — kirupai
6. thaasanaam sthaevaanin saayalai maattina
naesamaay kirupaiyai emmaelum oottidum — kirupai
7. varukiraen seekkiram enturaiththa naesaa
tharukiraen ennaiyae aaseervathiththida — kirupai
8. atiyaaraam aelaikal ummaich santhiththida
mutivu varaikkum , kaaththidum kirupaiyaal — kirupai

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com