kolkathaa maettinilae கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்
கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்
பாவத்தின் சன்மானமான என் சாபத்தை
நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக
வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா
வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா
அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா
என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன்
என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2
மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன்
என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன்
மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக்கொண்டேன் – 2
தெய்வத்தின் மன்னிப்பினால் நெடுநல் வாழ்வு பெற்றேன்