krishthore ellorum kalikoornthu paadi கிறிஸ்தோரே எல்லாரும்
1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை
2. மகத்துவ ராஜா,
சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா;
முன்னணை தானோ
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை
3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி
போற்றி துதியுங்கள்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை
4. அநாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்திரிப்போம்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை