• waytochurch.com logo
Song # 25775

kurusinil thongiyae kuruthiyum vatiya குருசினில் தொங்கியே குருதியும் வடிய


குருசினில் தொங்கியே குருதியும் வடிய,
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந்துயர், பாவி,
கொள்ளாய் கண் கொண்டு.
1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத் திரள் சூழ.
2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க – ய+த
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை
3. சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ! – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ?

kurusinil thongiyae kuruthiyum vatiya,
kolkathaa malaithanilae – nam
kuruvaesu suvaami kodunthuyar, paavi,
kollaay kann konndu.
1. sirasinil munnmuti uruththida, arainthae
siluvaiyil serththaiyo – theeyar
thirukkarang kaalkalil aannikalatiththaar
senaith thiral soola.
2. paathakar naduvil paaviyinaesan
paathakanpol thonga – ya+tha
paathakar parikaasangal pannnnip
paduththiya kodumaithanai
3. santhirasooriya sakala vaan senaikal
sakiyaamal naanuthaiyo! – thaeva
sunthara maintha nuyir vidukaatchiyaal
thutikkaa nenjunntoo?

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com