kuyavane kuyavane padaippin karanane குயவனே குயவனே படைப்பின் காரணனே
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே.
மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
காணாமல்போன பாத்ரம் என்னை, தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே