makimaiyin thaevanae மகிமையின் தேவனே – எந்தன்
1. மகிமையின் தேவனே – எந்தன்
மகத்துவ ராஜனே – உம்மை நான்
வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன்
எந்தன் உயிரான இயேசுவே
வல்லமையின் நாமமே
என் இயேசுவின் உயர் நாமமே
விடுதலையின் நாமமே
என் இயேசு நாமம் உயர் நாமமே
2. மரணத்தை வென்றவர் – இன்றும்
உயிரோடிருப்பவர் – தூய
ஆவியினால் என்னை நிரப்பியவர்
இன்றும் அற்புதங்கள் செய்கிறவர்
வல்லமையின் நாமமே
என் இயேசுவின் உயர் நாமமே
விடுதலையின் நாமமே
என் இயேசு நாமம் உயர் நாமமே