maname maname nee – மனமே மனமே நீ
Maname Maname Nee
மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய்
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
நீ ஏன் பதறுகிறாய்
மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர்
நீர் வல்லமையுள்ளவரே
உனக்குள்ளே இருப்பவர் என்றும் பெரியவர்
நீர் நல்லவர் நல்லவரே
1. யகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரே
யகோவா எல்ரோயி என்னை காண்பவரே -2
யகோவா நிசியே வெற்றி தரும் தெய்வமே
நீர் என்றும் உயர்ந்தவரே
யகோவா ஷம்மா சமாதான தெய்வமே
நீர் என்றும் பெரியவரே-2
2. என்னுயிர் நேசமே லீலி புஷ்பமே
உந்தன் பாசமே எனக்கு போதுமே-2
அழகில் சிறந்தவர் மென்மையானவர்
என்னை ஆளுகை செய்பவரே
என் ஆத்தும நேசரே எந்தன் இரட்சகரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே -2