• waytochurch.com logo
Song # 25837

meetpar yesu kurusil thonginaarae மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே


மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே
1. லோகப்பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக்குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில் — மீட்பர்
2. இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில்
ஏழையான் என் பாவ பாரங்களை
எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் பூவில் — மீட்பர்
3. தேவனே என்னை ஏன் கை விட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையே – அவர் — மீட்பர்
4. அன்னை, தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப்பாட
ஆயிரம் நாவுகள் போதுமோ பதினாயிரம் — மீட்பர்
5. பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி, நாடி ஓடி வந்தால் உன்னைத்
தேற்றி, ஆற்றித் தாங்குவார் அவர் – இப்போ — மீட்பர்
6. கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல்மனமும் உருகிடுமே
மாயலோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே – என்றும் — மீட்பர்

meetpar yesu kurusil thonginaarae
moontanni meethil kaayam atainthae
1. lokappaavam theerkka paliyaana
thaeva aattukkuttiyaanavar
sonthamaana iraththam sinthi meettu
inthalavaay anpu koornthavar emmil — meetpar
2. yesuvae kalvaari siluvaiyil
aeri jeevan thanthiraavitil
aelaiyaan en paava paarangalai
engu sentu theerththuk kolluvaen poovil — meetpar
3. thaevanae ennai aen kai vittiro
entu yesu katharinaarae
paavaththaal pithaavin mukaththaiyum
paarkkavum mutiyavillaiyae – avar — meetpar
4. annai, thanthai yaavarilum maelaay
anpu koornthaar annnal yesuvae
aachchariya thaeva anpaippaada
aayiram naavukal pothumo pathinaayiram — meetpar
5. paava paaram lokak kavalaikal
thaavi unnaich soolntha pothilum
thaeti, naati oti vanthaal unnaith
thaetti, aattith thaanguvaar avar – ippo — meetpar
6. koramaam siluvaik kaatchi kanndaal
kalmanamum urukidumae
maayaloka aasai vanjikkumae
maaridaatha yesu pothumae – entum — meetpar

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com