mulangalil nindru jebikka aasai முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசை
முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசை
முழு உள்ளத்தோடு ஆராதிக்க ஆசை
முற்றிலுமாய் ஒப்புக் கொடுக்க ஆசை
எனக்கு முழுமையாய் மனம் திரும்ப ஆசை
1. கவலைகள் யாவும் மறந்திட ஆசை
கர்த்தரின் கருணையில் களிகூர ஆசை
பாவத்தை விட்டுவிட ஆசை ஆ….
சிலுவையின் நிழலில் வாழ ஆசை
ஆசை ஆசை ஆசை – எனக்கு
ஆசை ஆசை ஆசை
2. புதுப் புது பாடல்கள் பாடிட ஆசை
புதுப் புது தரிசனம் கண்டிட ஆசை
உம் சத்தம் கேட்க ஆசை ஆ….
தேவனே உம்மோடு பேச ஆசை
ஆசை ஆசை ஆசை – எனக்கு
ஆசை ஆசை ஆசை
3. அபிஷேக மழையில் நனைந்திட ஆசை
அந்நிய பாஷையில் துதித்திட ஆசை
உம் பாதையில் நடக்க ஆசை ஆ….
உம்மோடு சேர்ந்து வாழ ஆசை
ஆசை ஆசை ஆசை – எனக்கு
ஆசை ஆசை ஆசை