mullmudi nogudho devanae – முள்முடி நோகுதோ தேவனே
Mullmudi Nogudho Devanae
முள்முடி நோகுதோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதனே
முள்முடி நோகுதோ
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக
முழங்காலில் நிற்கிறேன் நாதனே
ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர்
களைத்ததோ கைகளும் ஏசுவே
சாட்டையால் முதுகில் அடித்தார்
சாட்டையும் ராஜனை அடித்ததோ
தாகத்துக்கு காடியா தந்தனர்
தண்ணீரை படைத்தவர் நீரன்றோ
தண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாரங்கும் இல்லையோ
தோளினில் சிலுவையை சுமந்தீரோ
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களை படைத்தவர் நீரன்றோ