naame thiruchabai நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள்
ஒரு உறுப்பு துன்பப்பட்டால்
துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்
உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்
ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும்
இயேசு கிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக
ஒரு உடலாக்கிவிட்டார்
பொழுது இன்று சாய்வதற்குள்
சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம்