naan nadanthu vantha pathaigal நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள்
நடக்க முடியல டாடி நடக்க முடியல
தாங்கிக் கொள்ளுங்க – கரத்தில்
ஏந்திக்கொள்ளுங்க
என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன்
ஓட முடியல – என் மன பெலத்தால்
நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன்
சுமக்க முடியல – என் கால் பெலத்தால்
கடந்து பார்த்தேன் கடக்க முடியல
என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன்
ஆள முடியல – என் பண பெலத்தால்
படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன்
ஒன்றும் முடியல – என் வாய் பெலத்தால்
வாழப் பார்த்தேன் வாழ முடியல