naan pavi than analum neer நான் பாவி தான் – ஆனாலும் நீர்
நான் பாவி தான் – ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னைக் கூப்பிட்டீர், என் மீட்பரே வந்தேன்.
நான் பாவி தான் – என் நெஞ்சிலே
கறை பிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே, வந்தேன்.
நான் பாவி தான் – பயத்தினால்
அலைந்து பாவ பாரத்தால்
அழிந்து மாண்டு போவதால், என் மீட்பரே வந்தேன்.
நான் பாவி தான் – மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்,
உம்மாலே பெற்று வாழவும், என் மீட்பரே, வந்தேன்.