naan unnaivittu vilakuvathillai நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும்கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிபோல் உன்னைக் காப்பேன்
1.பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய்
நான் நடத்திடுவேன்
2.அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் – நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
3.நீதியின் வலக்கரத்தாலே – உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியில்
உண்மையாய் ஜெபித்திடுவாய் – தினம்
அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்