naanum en veetarum – நானும் என் வீட்டாரும்
Naanum En Veetarum
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே