namakkoru palagan piranthar நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார்
அவர் இயேசு தெய்வ மைந்தனாம்
அவர் பாதம் வணங்குவோம்
உன்னதத்தில் மகிமை
பூமியில் அமைதி
என்றும் உண்டாகவே
1. அதிசயமானவர் அவர் ஆலோசனை கர்த்தா
வல்லமையுள்ளவர் அமைதி காப்பவர்
இம்மானுவேலவர் என்றும் நம்மோடிருப்பவர்
இருளை அகற்றி ஒளியை தருபவர்
– நமக்கொரு
2. பாவிகள் நமக்காய் இந்த பாரில் உதித்தவர்
வான்மகிமைவிட்டு ஏழையாய் வந்தவர்
தேவாதி தேவனை இந்த ராஜாதி ராஜனை
ஏகமாய் போற்றியே வாழ்த்திடுவோம் நாமே
– நமக்கொரு