nampikaiku uriyavarey நம்பிக்கைக்கு உரியவரே
நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம் (2)
1. சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2)
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2)
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு
2. உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்(2)
உள்ளமெல்லாம் மகிழுதையா
உம் வசனம் நம்புவதால் (2)
பாதைக்கு தீபம்…
3. தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்(2)
எலும்புகள் உரம் பெறும்
என்உடலும் நலம் பெறும் (2)
4. புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் (2)
கைதியாக கப்பல் ஏறி
கப்டனாக செயல் பட்டான் (2)
5. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன் பிடித்தார்
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார்
6. உமது வார்த்தைகள் கைக் கொண்டு
உமக்கு உகந்தவற்றை செய்து வந்தால்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்
ஊற்று நீராய் பொங்கிடுவேன்