nan aarathikkum iyaesu nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நம்பிடுவாய் நீ நம்பிடுவாய்
1. கலங்கிபோன நேரத்திலும்
கரம் பிடித்து நடத்துவார்
தம் சிரகாலே உன்னை மூடி
பாதுகாத்து நடத்துவார்
2. பொல்லாத வார்த்தைகள் வந்தனவோ
பொறுமையாக நீ சகித்தாயோ
இயேசுவின் அன்பு தேற்றிடுமே நீ
அவரின் மார்பில் சாய்ந்திடுவாய்
3. மனிதர் உன்னை வெறுத்தாலும்
மாராத இயேசு இருக்கிறார்
தனிமையான நேரத்திலும் உன்
தந்தையாய் வந்து தேற்றிடுவார்