nanbi vanthen messiah naan nanbi vanthene நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே – திவ்ய
நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே
சரணங்கள்
1. தம்பிரான் ஒருவனே, தஞ்சமே தருவனே – வரு
தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே — நான்
2. நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே — நான்
3. நாதனே, கிருபைகூர், வேதனே, சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே — நான்
4. பாவியில் பாவியே, கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி, அகல விடாதே, நம்பிவந்தேனே — நான்
5. ஆதி ஓலோலமே பாதுகா காலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே — நான்