nanti solli ummai paada vanthom நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்
வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்
நன்றி நன்றி சொல்வோம் உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை
காற்றுமில்ல மழையுமில்ல
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே
உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர்
கைவிடாமல் விட்டு விலகிடாமல்
நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்
வெட்கப்பட்ட தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே