neer ennai thedi – நீர் என்னை தேடி
Neer Ennai Thedi
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிந்திருப்பேன்
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்
சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல
2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ தேவை இல்ல
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்
3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்