neer thantha intha vaalvai நீர் தந்த இந்த வாழ்வை
நீர் தந்த இந்த வாழ்வை
உமக்கென்றும் அர்ப்பணிப்பேன்
இயேசு தேவா கிறிஸ்து நாதா
உம்மை என்றும் மறவேனே
இரு கைகள் உம்மை வணங்கி
என்றும் தொழுகை செய்திடுமே
இரு கால்கள் சுவிஷேசம்
என்றும் பரப்ப செய்திடுமே — நீர்
எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்
யாவும் உமக்கே தந்திடுவேன்
எந்தன் உள்ளம் எனதாவி யாவும்
உமக்கே ஈந்திடுவேன் — நீர்