neere ennai kaividaadhavar – நீரே என்னைக் கைவிடாதவர்
Neere Ennai Kaividaadhavar
நீரே என்னைக் கைவிடாதவர்
விட்டு விலகிடாதவர்
வழியில் காத்து நிற்பவர்
நீரே என்னை முற்றும் காத்தவர்
என்னில் அன்பு கூர்ந்தவர்
என்றும் மாறிடாதவர்
உந்தன் நாமம் என்றும் மேன்மையானதே
உலகை என்றும் ஆளுமே
எம்மை காக்க வல்லதே
உந்தன் நாமம் இருளை ஒளிரச் செய்ததே
கவலை மறையச் செய்ததே
என்னை வாழவைத்ததே – நீரே
எனக்காய் பாவம் சுமந்தீர்
துயரம் அடைந்தீர்
முழுதும் சகித்தீர்
நிலையற்ற என் வாழ்வை மீட்டீர்
என்னை அளவில்லா அன்பு செய்தீர்
கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன்
என் கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன்
அன்பால் என்னை நீர் கவர்ந்தீர்
ஜீவனைத் தந்தீர்
உம்மை துதித்திடுவோம் (2)
நீதி என்றும் நிலைக்கும்
உந்தன் நாமம் மேன்மையாகும்
நீரோ என்னை அழைத்த
இந்த அழைப்பும் மேன்மையாகும்
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ – நீரே
For Song CD/DVD please call/WhatsApp David @+91-9025658484(will be send via Postal/Courier)