neere vali neere sathyam நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
விண்ணிலும் மண்ணிலும் மெய்நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தான் ஐயா
1. கல்லுமல்ல மண்ணுமல்ல கல்லான ஓர் சிற்பமல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால் நீர் தானையா
ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கி;ல்லை
ஆவியாய் இருக்கின்றீர் ஆண்டவரே
2. உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது
உம்நாமம் மகிமைக்கே உண்டாக்கினீர்
படைப்பு தெய்வமல்ல பார்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே தெய்வம் ஐயா
3. எல்லாம் வல்ல தெய்வம் நீரே எல்லை இல்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே
வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி