neethiyil nilaaithirunthu – நீதியில் நிலைத்திருந்து
Neethiyil Nilaaithirunthu
நீதியில் நிலைத்திருந்து – உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது -உம்
சாயலால் திருப்தியாவேன் -நீதியில்
1. தேவனே, நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
அல்லேலூயா ஓசான்னா
2. ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம்
3. உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லி துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா
4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்.