nilaiyilla ulagu nijamilla நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
நிலையான தொன்றும் இங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும்
மாறாத தெய்வம்
நீர் மட்டும் போதும் எப்போதும்
நீர் மட்டும் போதும்!
நீர் மட்டும் போதும்!
நீர் மட்டும் போதும் எப்போதும்! (2)
1. இன்பந்தரும் உலகு
செல்வத்தின் வாழ்க்கை
இங்கு என்றும் நிலைத்தது
இல்லை! அன்பு நாதன் இயேசு
அளித்திடும் வாழ்வில்
ஆனந்தம் நிறைவாக
உண்டே!
நீர் மட்டும் போதும்!
என் வாழ்வு மாறும்! (2)
நீர் மட்டும் போதும் எப்போதும்!
2. பொன் பொருளைத் தேடி
பகட்டாக வாழ
ஏங்கிடும் வாழ்க்கை
என்றும் வெறுமை!
போதுமென்ற மனதில்
தெய்வ வாழ்வு கண்டால்
நிறைவான வாழ்வு என்றும்
உண்டே!
நீர் மட்டும் போதும்!
என் வாடிநவு மாறும்! (2)
நீர் மட்டும் போதும் எப்போதும்!
3. லோகத்தின் ஸ்னேகம்
பாசத்தின் மாயை
மறையுதே மேகத்தைப் போல!
மங்காத உறவு மாறாத
ஸ்னேகம் தந்திடும்
இயேசுவே நித்தியம்!
நீர் மட்டும் போதும்!
என் வாழ்வு மாறும்! (2)
நீர் மட்டும் போதும் எப்போதும்!