nilaiyilla ulagu nijamilla uravu நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
நிலையானதொன்றும் இங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
நீ மட்டும் போதும் எப்போதும்
நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
நீ மட்டும் போதும் எப்போதும்
ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
ஆடி இங்கு அடங்குது வாழக்கை
வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
வசந்தம் வந்து எம்மில் என்றும் தங்கும்
நீ மட்டும் போதும என் வாழ்வு மாறும் –2
நீ மட்டும் போதும் எப்போதும்
பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
பொழுதிங்கு போகுது கழிந்து
உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் –2
நீ மட்டும் போதும் எப்போதும்