ninaivu kuurum theyvamae nanri நினைவு கூறும் தெய்வமே நன்றி
நினைவு கூறும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா
1. நோவாவை நினைவு கூர்ந்ததால்
பெருங்காற்று வீசச் செய்தீரே – அன்று
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா
2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவை காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா
3. அன்னாளை நிவைவு கூர்ந்ததால்
ஆண் குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றுகிறீர் நன்றி ஐயா – எங்கள்
4. கொர்நெலியு தான தர்மங்கள் – ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே – அவன்
5. ராகேலை நினைவு கூர்ந்ததால்
யோசேப்பை பரிசாய் தந்தீரே
இன்னுமொரு மகனைத் தருவீர்
என்று சொல்லி துதிக்கச் செய்தீரே
6. எக்காளம் ஊதும் போதெல்லாம்
எங்களை நினைக்கின்றீர்
எதிரிகளின் கையிலிருந்து
இரட்சித்து காப்பாற்றுகிறீர்