• waytochurch.com logo
Song # 26058

nirmulamagathirupathu unthan நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை


நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் நான்
கிருபை கிருபை மாறாத கிருபை
கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களிலே அமரச் செய்தீர்
கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக
சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே
தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால்
ஜீவனைப் பார்க்கிலும் மேலானது
உந்தன் கிருபை மேலானது
அழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்
ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன்
காலைதோறும் புதியது
உந்தன் கிருபை புதியது
காத்திருப்பேன் உம் பாதத்தில்
களிகூர்வேன் உம் கிருபையில்
இயேசுவை அறிகிற அறிவினாலே
அமைதியும் கிருபையும் பெருகிடுதே
நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும்
நாளும் பொழுதும் சூழ்ந்துகொள்ளும்
தாயின் வயிற்றில் இருந்தபோதே
பிரித்தெடுத்தீரே, அழைத்தீரே
ஆவியை அளித்து, அற்புதம் செய்து
ஆசீர்வதித்தீர் அதிசயம் செய்தீர்

nirmoolamaakaathiruppathu unthan maa kirupai
mutivae illaathathu unthan manathurukkam naan
kirupai kirupai maaraatha kirupai
kirupaiyinaalae iratchiththeerae
neethimaanaaka maattineerae
uyirththelach seytheer kiristhuvotae kooda
unnathangalilae amarach seytheer
kirupaiyin makimaikku pukalchchiyaaka
sontha pillaiyaay munkuriththeerae
parisuththa iraththaththaal meetpaliththeerae
paavam anaiththaiyum manniththeerae
thaevanin palaththa saththuvaththaalae
narseythi arivikkum thiruththonndanaanaen
kiristhu yesuvin alavatta selvaththai
arivikkinten naan kirupaiyinaal
jeevanaip paarkkilum maelaanathu
unthan kirupai maelaanathu
alivillaa anpudan anpu koornthaen
aarvamaay innum anpu koorvaen
kaalaithorum puthiyathu
unthan kirupai puthiyathu
kaaththiruppaen um paathaththil
kalikoorvaen um kirupaiyil
yesuvai arikira arivinaalae
amaithiyum kirupaiyum perukiduthae
nampikkai valarnthaal kirupai valarum
naalum poluthum soolnthukollum
thaayin vayittil irunthapothae
piriththeduththeerae, alaiththeerae
aaviyai aliththu, arputham seythu
aaseervathiththeer athisayam seytheer

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com