oru naalum enai maravaa theyvam neerae ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா (2)
உம் வல்லக்கரத்தில்
நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2)
யார் மறந்தாலும்
நான் மறவேனே
என்று வாக்கெனக்கு அளித்தவரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2)
நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்