paadaatha raakangal paadum பாடாத ராகங்கள் பாடும்
பாடாத ராகங்கள் பாடும்
மீளாத இன்பங்கள் ஆடும்
கேளாத கீதங்கள் கேட்கும்
மேய்ப்பன் வருகை கூறும்
எந்தன் மீட்பர் வருகின்றார் – (3)
1. உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலை
தெய்வம் தந்த அழகன்றோ
அன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்
இறைவனின் அழகன்றோ
ஏங்குதென் நெஞ்சமே தாங்கிடும் தஞ்சமே
2. எனக்காய் வந்த இன்பத்தின் நிழலே
இளைப்பை ஆற்றிடுமே
தாகத்தை தீர்க்கும் பேரின்ப ஊற்றே
தாகத்தை தீர்த்திடுமே
அன்பரை காணவே கண்களும் ஏங்குதே