paadinal paaduven yesu baalanai பாடினால் பாடுவேன் இயேசு பாலனை
பாடினால் பாடுவேன் இயேசு பாலனை
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்
தேடினால் தேடுவேன் இயேசு தேவனை
உன்னருள் நான் தேடுவேன் தேடுவேன்
1. பன்னிரு வயதினில் பாலகன் நீரே
என்னரும் போதனை இயம்பி நின்றிரே
கோடையில் கிடைத்த குளிர் இளநீரே
கடையர் களித்திட கதி தருவீரே
2. பாவை உம்மை தொட்டதினாலே
பறந்து போனதே அவள் தன் நோயும்
பாவி எந்தன் பாவ வினைகள்
பறந்து போகுமே உன்னை நினைத்தால்