• waytochurch.com logo
Song # 26115

paalar njaayirithu paasamaay vaarum பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்


பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும்,
பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும்.
தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப் — பாலர்
1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்,
பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம்,
பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்,
ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் — பாலர்
2. தேடி வந்தலையும் தேசிகருண்டு,
பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு. — பாலர்
3. இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே,
இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,
அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்
எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு — பாலர்

paalar njaayirithu, paasamaay vaarum,
paati yesu naamam panninthu pottum.
thaalanthai puthaiththidaamal thaamathamae pannnnidaamal
njaalameethirangi vantha suvaami yesu anpaay ennnnip — paalar
1. paalar sangaththaalae maatchimai pettaோm,
paalar naesar patham panniyak kattaோm,
paaril jothi veesukinta parisuththa vaetham kattaோm,
ooril engum nam panjaangam othum paaliyar naesan kanntoom — paalar
2. thaeti vanthalaiyum thaesikarunndu,
paati aarpparikka paalar paattunndu,
kooti vanthu aananthikkak koottappanntikaiyumunndu
naati meetpar paatham paalar thaeda ellaa aethumunndu. — paalar
3. intu mattum nammai aenthi vanthaarae,
innum nithyamum paathukaappaarae,
anpin sangam ithaikkonndu aathma naesar seythu varum
ennnni mutiyaa nanmaiyai aekamaaka ennnnikkonndu — paalar

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com