paathakan en vinaitheer பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின்
பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.
தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. — பாதகன்
1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? — பாதகன்
2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே — பாதகன்
3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. — பாதகன்