palipeedaththil vaiththaen ennai பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் – (2)
நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே – (2)
நின் சித்தம் போல் உம் கரத்தால் -(2)
நித்தம் வழிநடத்தும் – (2)
வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் – (2)
வாருமய்யா வந்து என்னை – (2)
வல்லமையால் நிரப்பும் – (2)
பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க – (2)
பரிசுத்தமான உம் இரத்தத்தால் – (2)
பரிசுத்தமாக்கி விடும் – (2)