paralokaththilirunthu vanthiduvaar பரலோகத்திலிருந்து வந்திடுவார்
பரலோகத்திலிருந்து வந்திடுவார்
பரிசுத்த ஆவி என்னில் நிறைத்திடுவார்
பரிவாய் என்னை என்றும் காத்திடுவார்
என் மனதில் நிறைந்து அருள் புரிவார்
1. பரனே மனதை காத்திடுவார்
குறையை நீக்கி அருள் புரிவார்
நெருப்பாய் என்னில் எரிந்திடுவார்
புதிய ஜீவன் தந்திடுவார்
2. கருணை கடலே காத்திடுவார்
என் கலக்கம் தீர்த்து அணைத்திடுவார்
ஜீவ ஊற்றாய் வந்திடுவார்
ஆவி அபிஷேகம் தந்திடுவார்
3. அருகில் இருந்து ஆண்டிடுவார்
அருளை தினமும் பொழிந்திடுவார்
காலம் கடந்தும் நின்றிடுவார்
இரட்சிப்பின் பாதை காட்டிடுவார்