parama kuyavanae ennai vanaiyumae பரம குயவனே என்னை வனையுமே
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே
1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்து
மனிதனை உருவாக்கினீர் (2)
எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்
உம்மை போல மாற்றிடுமே – என்னை — பரம
2. உமக்குகந்ததாய் உடைத்து என்னை
உம்முடைமை ஆக்கிடுமே (2)
விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்
அருமையாக வனைந்திடுமே – உமக்கு — பரம
3. உமது சித்தத்தின் மையத்தில் என்னை
வைத்து என்றும் வழி நடத்திடும் (2)
உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்
முழுமையாக அர்ப்பணம் செய்தேன் – என்னை — பரம