paraththilae yirunthuthaan பரத்திலே யிருந்துதான்
1. பரத்திலே யிருந்துதான்
அனுப்பப்பட்ட தூதன் நான்
நற்செய்தி அறிவிக்கிறேன்
பயப்படாதிருங்களேன்.
2. இதோ எல்லா ஜனத்துக்கும்
பெரிய நன்மையாய் வரும்
சந்தோஷத்தைக் களிப்புடன்
நான் கூறும் சுவிசேஷகன்
3. இன்றுங்கள் கர்த்தரானவர்
மேசியா உங்கள் ரட்சகர்
தாவீதின் ஊரில் திக்கில்லார்
ரட்சிப்புக்காக ஜென்மித்தார்
4. பரத்திலே நாம் ஏகமாய்
இனி இருக்கத்தக்கதாய்
இக்கட்டும் பாவமுமெல்லாம்
இம்மீட்பரால் நிவிர்தியாம்
5. குறிப்பைச் சொல்வேன் ஏழையாய்
துணியில் சுற்றப்பட்டதாய்
இப்பிள்ளை முன்னணையிலே
கிடக்கும் ஆர் கர்த்தர் தாமே.