parithi thuunkita paathiraa பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்
பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்
பாரிடை பிறந்தவரே…
பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்
தரணியில் பிறந்தவரே… (2)
1. மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்
வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… (2)
தேவ குமாரா தாவீதின் மைந்தா
தாழ்மையின் திரு…வுருவே – தியாகத்தின் திருவடிவே
– பரிதி
2. கனிகள் கனி…யட்டும் மலர்கள் மல…ரட்டும்
பரமன் நின் பெருமை புகழ்ந்தி…டட்டும் (2)
மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்
மானிடன் ஆ…னாரே – மாந்தரை மீட்டிடவே
– பரிதி