pavani selkintar raasaa பவனி செல்கின்றார் ராசா – நாம்
பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா!
அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம். — பவனி
1. எருசலேமின் பதியே! – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே! — பவனி
2. பன்னிரண்டு சீடர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம் சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத. — பவனி
3. குருத்தோலைகள் பிடிக்க, – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.