• waytochurch.com logo
Song # 26188

payanthu karththarin paathai yathanil பயந்து கர்த்தரின் பாதை யதனில்


பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்யவான்.
அனு
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்.
சரணங்கள்
1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,
தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்.
2. ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே.
3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை.

payanthu karththarin paathai yathanil
panninthu nadappon paakyavaan.
anupallavi
muyantu ulaiththae palanai unnpaan
mutivil paakyam maenmai kaannpaan.
saranangal
1. unnnutharkiniya kanikalaith tharum,
thannnnilal thiraatchaைk kotipol valarum
kannnniya manaivi makilnthu iruppaal
ennnarum nalangal illaththil purivaal.
2. olivamaraththaich soolnthu maelae
uyarum pachchilang kantukal polae
melivilaa nalla paalarun paalae
mikavum kaliththu vaalvar anpaalae.
3. karththarun veettaைk kattavitil athaik
kattuvor muyarsi veennaam ari ithai
karththaraal varum suthantharam pillaikal
karppaththin kaniyum karththarin kirupai.

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com