pethlaekam oororam பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
பக்தியுடன் இத்தினம் வாஓடிப் — பெத்லேகம்
2. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் — பெத்லேகம்
3. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ,
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ,
ஆன பழங் கந்தை என்ன பாடோ? — பெத்லேகம்
4. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி,
இன்றிரவில் என்ன இந்த மோடி — பெத்லேகம்
5. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு,
அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு,
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு — பெத்லேகம்