pisasanavan thotruponavan – பிசாசானவன் தோற்றுப்போனவன்
Pisasanavan Thotruponavan
பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே -2
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் -2
1. பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை -2
ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் -2
2. பிசாசானவன் பொய்யன்தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
சத்திய ஆவி நமக்குளே
சகலமும் போதித்து நடத்திடுவார்
3. ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
பரிசுத்த அக்கினி எனக்குளே
அனைத்திட யாரலும் முடியாது