pithaavae engalai kalvaariyil பிதாவே எங்களை கல்வாரியில்
1. பிதாவே, எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,
தரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.
2. ஆ, எங்கள் குற்றம் கறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே;
விஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்;
உம் பேரருளைப் போக்கடித்தோமே;
என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.
3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;
சிறந்த நன்மை யாவும் அளியும்;
உம் மார்பினில் அணைத்துக் காருமே;
எத்தீங்கும் அனுகாமல் விலக்கும்;
உம்மில் நிலைக்க பெலன் அருளும்.
4. இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
பேரின்பம் தருந் திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.